யாழ். ஏழாலை பகுதியில் பெருமளவான கசிப்புடன் சந்தேகநபர் கைது!
இன்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு சிவன்கோவிலடி பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் போன்றவற்றுடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீண்ட காலமாக சகிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 1 இலட்சத்து 10 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா, 40 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் என்பன சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.