SuperTopAds

வடமராட்சி கடற்கரையில் கரையொதுங்கிய சிலை.!

ஆசிரியர் - Admin
வடமராட்சி கடற்கரையில் கரையொதுங்கிய சிலை.!

இன்றைய தினம்(13) வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அண்மைக்காலமாக கால நிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் கடல் சீற்றங்கள், சூறாவளி என்பன ஏற்பட்டது. இதன்போது குறித்த சிலையானது இந்தோனேசியா, அல்லது மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் குவிந்துள்ளனர்.