சுவாசக் குழாயில் கச்சான் சிக்கி குழந்தை பலி!
யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு சுவாசக் குழாயில் சிக்கியதால் உயிரிழந்துள்ளது. சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தை நேற்றுகச்சான் சாப்பிட்டவேளை புரையேறியது. பின்னர் குழந்தை உறங்கி விட்டது. நேற்று இரவு எழுந்து வாந்தி எடுத்த குழந்தை அழுதவேளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சுவாசக் குழாயில் கச்சான் சிக்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.