SuperTopAds

மனைவியின் காதை வெட்டியவருக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Admin
மனைவியின் காதை வெட்டியவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் சித்திரவதை தாங்காமல் சண்டிலிப்பாயில் உள்ள உறவினரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற கணவன் கடந்த 07.10.2024 அன்று மனைவியின் காதை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், இச்சம்பவம் குறித்து கடந்த 10.10.2024 அன்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

சந்தேக நபருக்கு எதிராக வேறு சில முறைப்பாடுகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தப்பிச் சென்ற நபர் கடந்த வெள்ளிக்கிழமை (10) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் இதற்கு முன்னரும் மனைவியின் தலை மற்றும் காலினை உடைத்து, பல்வேறு சித்திரவதைகளை செ

ய்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று சனிக்கிழமை (11) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை அடுத்த 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.