SuperTopAds

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி; நாகை மீனவர்கள் நிபந்தனையில் விடுதலை!

ஆசிரியர் - Admin
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி; நாகை மீனவர்கள் நிபந்தனையில் விடுதலை!

எல்லை தாண்டி தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை, கடற்படை படகை சேதப்படுத்தியமை, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பன்னிரு இந்திய மீனவர்களையும் நேற்று (08) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை கடந்த நவம்பர் 27ம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் வழக்கில் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரினால் மேற்கொண்ட வழக்கில் மீனவர்கள் பன்னிருவரும் இன்று 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு மீண்டும் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறை என்ற நிபந்தனையுடன் பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

படகு அரசுடமையாக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.