SuperTopAds

வவுனியா இளைஞர் கனடாவில் பரிதாப உயிரிழப்பு!

ஆசிரியர் - Admin
வவுனியா இளைஞர் கனடாவில் பரிதாப உயிரிழப்பு!

கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபகரமாகத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த மேற்படி இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று வெள்ளிக்கிழமை தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற நிலையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது 20) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.