SuperTopAds

வடமராட்சி கிழக்குக் கடலில் கரையொதுங்கும் ஆமைகள்.!

ஆசிரியர் - Admin
வடமராட்சி கிழக்குக் கடலில் கரையொதுங்கும் ஆமைகள்.!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் இறந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இறந்த நிலையில் சில ஆமைகள் 03.01.2025 வெள்ளிக் கிழமை நாகர்கோவில் கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளன.

கடலில் கடும் காற்று வீசத் தொடங்கியுள்ளதால் அலைகளின் சீற்றம் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகரித்தே காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே ஆமைகள் இறந்து கரையொதுங்குவதாகவும் கரையொதுங்கிய ஆமைகளின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடமும் இதே காலப்பகுதியில் வடமராட்சி கிழக்கின் பல இடங்களில் ஆமைகள் இறந்து கரையொதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.