SuperTopAds

இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஆஸி.

ஆசிரியர் - Admin
இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஆஸி.

ரோஹிட் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 3 போட்டிகள் முடிவில் தொடர் 11 என சமநிலை வகித்த நிலையில் 4வதாக பொக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று நிறைவுக்கு வந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி. அணி 474 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 369 ஓட்டங்களை சேர்த்தது.

அதன்படி 105 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸி. அணி 234 ஓட்டங்களைச் சேர்த்தது. இறுதியாக இந்திய அணியின் வெற்றியிலக்காக 340 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. குறித்த இலக்கை நோக்கி நேற்றைய 5ஆவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி 155 ஓட்டங்களுக்குள் சுருண்டு போக அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரில் 21 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸி. அணி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அடுத்து 03ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியாவுடனான 5ஆவது போட்டியில் ஆஸி. அணி வெற்றியீட்டினால் தென்னாபிரிக்காவுடன் இறுதிப்போட்டியில் விளையாட தகுதிபெற்றுவிடும்.

மாறாக அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியீட்டினால் மாத்திரம் இலங்கை அணிக்கு வாய்ப்பு இறுதிப்போட்டி வாய்ப்புக் காணப்படுகிறது. மேலும் ஆஸி. அணியுடன் நடைபெறவுள்ள இரு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற வேண்டும்.