SuperTopAds

வவுனியா விபத்தில் யாழ்.அராலி பகுதி இளைஞன் பலி...

ஆசிரியர் - Editor I
வவுனியா விபத்தில் யாழ்.அராலி பகுதி இளைஞன் பலி...

வவுனியா - கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

புதன்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிறிஸ்மஸ் தினமான புதன்கிழமை இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மற்றைய நபர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் யாழ் அராலிபகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான இளைஞரே மரணமடைந்தவராவார்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.