ஒரு கிலோ 50 கிராம் குஷ் போதைப் பொருளுடன் ரஷ்ய நாட்டவர் கைது!
குஷ் என்ற போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் நேற்று (23) பிற்பகல் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதான ரஷ்ய பிரஜை ஆவார்.
சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் குஷ் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.