யாழ்.போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த நபர் கைது!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர் , நோயாளர் விடுதிக்குள் செல்ல முற்பட்ட நபரை வைத்தியசாலை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது , காவலாளிகளுடன் தர்க்கப்பட்டு , அவர்களில் ஒருவரை கடித்துள்ளார்.
அதனை அடுத்து ஏனைய காவலாளிகள் ஒன்றிணைத்து கடித்த நபரை மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்ததை அடுத்து , அவரை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
அதேவேளை கடிகாயங்களுக்கு உள்ளான நபர் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.