SuperTopAds

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்ற திருக்கார்த்திகை உற்சபம்..

ஆசிரியர் - Editor I
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்ற திருக்கார்த்திகை உற்சபம்..

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை(13) மாலை  பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான  நேற்று மாலை 4.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று, வள்ளி, தேவசேனா சமேதராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நல்லூர் முருகப்பெருமான் வெளிவீதியுலா வந்தமை சிறப்பாக நடைபெற்றது.