யாழ்.நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்தும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை வழக்கொன்றுக்காக அழைத்துவரப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்தார்.
நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரே உயிரிழந்தவராவார்.
இக்கைதி பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்பு பட்டவர் என பொலிசார் மற்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.