SuperTopAds

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 7 மரணங்களுக்கும் காரணம் எலிக்காய்ச்சல்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 7 மரணங்களுக்கும் காரணம் எலிக்காய்ச்சல்!

வட மாகாணத்தில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த 07 பேரின் இரத்த மாதிரி பரிசோதனையில் அவர்கள் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீண்ட நாள் காய்ச்கல் , கண் சிவத்தல் , உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கசித்தல் என்பன எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாகும்.

எனவே இந்த நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமாகும்.