SuperTopAds

கோட்டாபயவை விட கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அனுர உள்ளார்.

ஆசிரியர் - Admin
கோட்டாபயவை விட கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அனுர உள்ளார்.

வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின்  வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்கையில், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் தென்னிலங்கையில் அனுர தரப்பு 113 ஆசனங்களை பெறும் என்று நம்புகிறோம். கோட்டாபயவை விட கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அனுர குமார திஸாநாயக்க உள்ளார். இந்நிலையில் அதனை எதிர்கொள்ள பலமான அணியொன்று வடக்கு கிழக்கில் இருந்து செல்லவேண்டும்.

வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது.

ஏனையவர்களை ஒன்றிணைத்து களமிறங்க நாம் திட்டமிட்டோம். அது சாத்தியப்படவில்லை.

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் பெறுவதை உறுதிப்படுத்த சேர்ந்து போட்டியிட முயற்சித்தோம். ஆனால் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதனை விரும்பவில்லை. ஒன்றுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்ததால் தான் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் அவ்வாறு உடைகிறது. 

விக்னேஸ்வரனின் கட்சி யாழ்ப்பாணத்தில் மட்டும் போட்டியிடுகிறார்கள். வடக்கு கிழக்கு எங்கும் கிளைகள் இல்லை. 

சில சுயேட்சைகள் ஆயிரம் வாக்குகளை பெறும் என்கிறார்கள். ஆனால் எனக்குள்ள கவலை அது பயனில்லாமல் போகப்போகிறதே என்பது தான் - என்றார்