SuperTopAds

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தலாம்?

ஆசிரியர் - Admin
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தலாம்?

பாதாம் ஒரு தானிய வகையாகும். இதில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் அதிக உதவியாக இருக்கும். தற்போது இருக்கும் தவறான உணவுப்பழக்கத்தின் காரணத்தினால் உடல் எடை அதிகமாகி கெட்ட கொலஸ்ராலின் அளவை அதிகமாக்கிறது. இதனால் இதய நோய் முதல் பலவிதமான நோய்கள் நம்மை வந்து சேரும். பாதாமில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் இது கெட்ட கொலஸ்ராலை குறைக்க உதவும். இதை எப்படி சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ராலை குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு அதிக பாதாம் சாப்பிடுதல் நமது உடலில் செரிமானப்பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதில் இருக்கும் அதிக ஆக்சலேட் உள்ளடக்கம் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்.

எனவே பெரியவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு 20 முதல் 25 வரை பாதாம் பருப்புக்களை சாப்பிடுவது நன்மையான விஷயமாகும். ஆனால் இதை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.

உணவுக்கு இடையில் அல்லது காலையிலோ அல்லது மாலையிலோ சாப்பிடுவது நல்ல நேரமாக இருக்கும். இப்படி பாதாமை சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ராலை குறைக்கலாம்.

பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது.

ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது! இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையும்.

எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவும் என நிபுணர்களால் கூறப்படுகிறது.

வயதாகிவிட்டதும் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது. பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது.

மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளை தீர்கக்க பாதாம் உதவும்.