SuperTopAds

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் என்ன தெரியுமா?

ஆசிரியர் - Admin
கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் என்ன தெரியுமா?

பொதுவாகவே பெண்களுக்கு நீண்ட ஆரோக்கியமான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பெரும்பாலான பெண்கள் தங்களின் நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவு செய்கின்றனர். ஆனால் கேரள பெண்களின் கூந்தல் எப்போதும் நீண்டதாகவும் ஆரோக்கியமாகவும் கருமையாகவும் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? நெல்லிக்காயை வைத்து தயாரிக்கும் சம்மந்தி தான். நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ-யின் சிறந்த மூலமாக இருக்கின்றது. இதில் ஒரு ஆப்பிள் பழத்திற்கு நிகராக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி காணப்படுவதால்,சரும ஆரோக்கித்தை மேம்படுத்தவும், செரிமான திறனை அதிகரிக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் இது கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதற்காகு கேரளா பொண்கள் நெல்லிக்காய் சம்மந்தி எப்படி தயாரிக்கின்றார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிக்காய் அல்லது சின்ன நெல்லிக்காய் - 8 அல்லது 20 - மாங்காய்½ அளவு

தேங்காய்- ½ மூடி

பச்சை மிளகாய்- 3

இஞ்சி - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 5

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் மற்றும் உப்பு கலந்த நீரில் அலசி நன்றாக துடைத்துக்கொள்ள வேண்தும்.

பெரிய நெல்லிக்காக இருக்கும் பட்சத்தில் சிறிய துண்டுகளாக வெட்டி விதைகளை நீ்க்கிக்கொள்ளலாம்.

சிறிய நெல்லிக்காய் என்றால் உரலில் இடித்து விதைகளை நீக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து மாங்காயையும் நன்றாக உப்பு மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக அலசி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயம், இஞ்சியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் நெல்லிக்காய் துண்டுகள் மற்றும் இஞ்சி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து நறுக்கிய மாங்காயையும்அதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மீண்டும் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் சின்ன வெங்காயம், மற்றும் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கூந்தல் வளர்ச்சியை தூண்டும் நெல்லிக்காய் சம்மந்தி தயார்.