SuperTopAds

தமிழ்ச் சூழலில் உள்ளுராட்சி தேர்தல் என்றுமில்லாதவாறு பரப்பரப்புக் குள்ளாகியிருக்கிறது. தென்னிலங்கையிலும் அவ்வாறானதொரு பரப்பரப்பு காணப்படுகிறது.

ஆசிரியர் - Editor II
தமிழ்ச் சூழலில் உள்ளுராட்சி தேர்தல் என்றுமில்லாதவாறு பரப்பரப்புக் குள்ளாகியிருக்கிறது. தென்னிலங்கையிலும் அவ்வாறானதொரு பரப்பரப்பு காணப்படுகிறது.</p>

தென்னிலங்கையின் பரபரப்பு விளங்கிக் கொள்ளக் கூடியது. ஆனால் வடக்கு கிழக்கில் ஏன் இந்தப் பரபரப்பு?

இதற்கான அரசியல் காரணங்கள் அனைத்துமே தமிழரசு கட்சியின் மீதான, அதன் தலைமையில் இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரசியல் முரண்பாடுகளிலிருந்தே தோற்றம் பெற்றிருக்கின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஆரம்பித்து தற்போது தமிழ்த் தேசிய பேரவையாக வெளிப்பட்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அரசியல் கூட்டாக இருந்தாலும் சரி, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஆகியவற்றின் இணைவாக வெளிப்பட்டிருக்கும் அரசியல் கூட்டாக இருந்தாலும் சரி அனைத்துமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகளின் வெளிப்பாடே!

இந்த பிளவுகளின் விளைவே உள்ளுராட்சித் தேர்தல் இந்தளவிற்கு பரப்பரப்பாக காணப்படுவதற்குக் காரணம்.

அன்மையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒருவர் ஒரு ராஜதந்திரியை சந்தித்த போது, அவர் கேட்டாராம் – இந்த உள்ளுராட்சித் தேர்தலுக்காக ஏன் இந்தளவுக்கு சண்டைகளும் விவாதங்களும் நடக்கின்றன?

இது ஒரு சாதாரண தேர்தல்தானே! அவர் கூறியது போல் இது ஒரு சாதாரண தேர்தல்தான் ஆனால் இந்த சாதாரண தேர்தல்தான் அளவுக்கதிகமான அரசியல் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.

தற்போது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து, மூன்று தரப்புக்கள் களமிறங்கவுள்ளன.

இங்கு மூன்று தரப்புக்கள் என்று குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது, தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை முன்னிறுத்திக் கொண்டு களமிறங்கும் அமைப்புக்கள் என்னும் வகையிலேயே மேற்படி மூன்று தரப்புக்களும் நோக்கப்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அது ஏற்கனவே இருப்பது போன்று கூட்டமைப்பாகவே இருக்கின்றது. இந்தக் கட்டுரை எழுதும் போது இதுதான் நிலைமை.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ தாங்கள் இனி தமிழரசு கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்திருத்த போதிலும் கூட, அதில் உறுதியான நிலைப்பாடு எதனையும் இதுவரை எடுத்திருக்கவில்லை.

டெலோ ஒரு நிலைப்பாட்டை எடுத்த பின்னர் யோசிக்கலாம் என்பதே பிறிதொரு பங்காளிக் கட்சியான புளொட்டின் நிலைப்பாடாக இருக்கிறது.

ஆனால் டெலோவின் முரண்பாடு தமிழ் மக்களின் நலன் சார்ந்ததல்ல மாறாக இடம் மற்றும் ஆசன ஒதுக்கீடு சார்ந்தது. எனவே அது சரிசெய்யக் கூடிய ஒன்று.

141206164716_suresh_premachandran_eprlf_tna_lanka_tamil_sri_lanka_640x360_bbc_nocredit விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? - யதீந்திரா (கட்டுரை) விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? - யதீந்திரா (கட்டுரை) 141206164716 suresh premachandran eprlf tna lanka tamil sri lanka  bbc nocreditஅந்த வகையில் நோக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்படியேதான் இருக்கப் போகிறது. சுரேஸ் பிரேமச்சந்திரன் தனிவழியில் செல்வது கூட்டமைப்பின் கட்டமைப்பை எந்தவகையிலும் பாதிக்கப் போவதில்லை.

ஆனால் ஒரு வேளை டெலோ வெளியேறுமாக இருந்தால் நிலைமைகள் முற்றிலும் தலைகீழாகலாம் ஆனால் சம்பந்தன் அவ்வாறானதொரு உடைவை தடுக்க எந்தவொரு தேர்தல் சமரசத்திற்கும் செல்வார்.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை இலங்கு வைத்து இரண்டு தரப்புக்கள் களமிறங்கவுள்ளன.

இதில் ஒரு அணியினர் தமது அரசியல் நிலைப்பாடாக திம்பு கோட்பாட்டை முன்னிறுத்திருக்கின்றனர். மற்றைய தரப்பினரான கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வோலசைனையை முன்னிறுத்தியிருக்கின்றனர்.

imageproxy.php விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? - யதீந்திரா (கட்டுரை) விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? - யதீந்திரா (கட்டுரை) imageproxyஇந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது – அவ்வாறாயின் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில் எவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுப்பார்?

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு மாற்றுத் தலைமை என்னும் எண்ணக்கருவின் விளைநிலமே மேற்படி தமிழ் மக்கள் பேரவைதான்.

தமிழ் மக்கள் பேரவையை மக்கள் மயப்படுத்தும் ஒரு நிகழ்வாகவே எழுக தமிழ் இடம்பெற்றது. ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் பலம் என்பது அதில் ஜனவசியமுள்ள தலைவராக கருதப்பட்ட விக்கினேஸ்வரன் இடம்பெற்றமைதான்.

விக்கினேஸ்வரனை பேரவையிலிருந்து கழித்துப் பார்த்தால் பேரவை என்பதில் ஒன்றுமில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பேரவையின் அனுசரனையுடன் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

மாற்றுத் தலைமை ஒன்றிற்கான அறிவிப்புக் கூட பேரவையின் அங்கத்தவர்களுடான சந்திப்பின் பின்னர்தான் வெளியிடப்பட்டது.

ஆனால் பேரவையின் அஸ்திபாரமான விக்கினேஸ்வரன் அவ்வாறானதொரு தேர்தல் அரசியலுக்கு ஆதரவளிக்கவில்லை.

அவரைப் பொறுத்தவரையில் தேர்தல் அரசியல் என்பது வெற்றி தோல்வி தொடர்பானது. ஒரு வேளை புதிய கூட்டு கணிசமான வெற்றியை பெறாது விட்டால், அது பேரவையின் தோல்வியாகவும் கருதப்பட்டுவிடும்.

அதன் பின்னர் பேரவையினால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகள் தொடர்பில், தொடர்ந்தும் குரல் கொடுக்க முடியாமல் போய்விடும்.

இந்தப் பத்தியாளரின் அவதானத்தில் விக்கினேஸ்வரன் கூறுவது சரிதான் ஆனால் அவ்வாறானதொரு நோக்கத்தில் பேரவை உறுதியாக இருந்திருந்தால், பேரவைக்குள் அரசியல் கட்சிகளை உள்வாங்கியிருக்கக் கூடாது.

ஏனெனில் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் தேர்தல் வெற்றி என்பது முக்கியமான ஒன்று. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பேரவையின் ஆதரவுடன் அதாவது விக்கினேஸ்வரனது ஆதரவுடன் ஒரு மாற்று அரசியல் சக்தியை கட்டியெழுப்ப முடியுமென்னும் நம்பிக்கை பலமடைந்தது.

ஆனால் அது சாத்தியமாகவில்லை. அதன் விளைவே தற்போது சுரேஸ் ஒரு பக்கமாகவும் கஜேந்திரகுமார் ஒரு பக்கமாகவும் சித்தார்த்தன் ஒரு பக்கமாகவும் நிற்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறானதொரு சூழலில்தான் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவை என்னும் பெயருடன் ஒரு அரசியல் கூட்டு உதயமாகியிருக்கிறது.

அது பேரவையின் தீர்வாலோசனையையே தங்களின் அரசியல் நிலைப்பாடாகவும் முன்னிறுத்தியிருக்கின்றது. இதிலுள்ள தந்திரோபாயம் மிகவும் வெளிப்படையானது.

kajenthirakumar விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? - யதீந்திரா (கட்டுரை) விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? - யதீந்திரா (கட்டுரை) kajenthirakumarபேரவையின் தீர்வாலோசனையுடன் களமிறங்கினால் விக்கினேஸ்வரனின் ஆதரவு தங்களுக்கிருப்பதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணுகின்றனர்.

ஆனால் அது வெறும் தோற்றமல்ல உண்மைதான் என்பதை விக்கினேஸ்வரன் உறுதிப்படுத்துவாரா என்பதுதான் இங்குள்ள சிக்கலான நிலைமை.

தற்போதைய நிலையில் பேரவையின் தீர்வாலோசனையில் பங்குகொண்ட மூன்று அரசியல் கட்சிகளில் ஒவ்வொன்றும் வேறு, வேறு இடங்களில் நிற்கின்றன. இதில் எவரது பக்கம் விக்கினேஸ்வரன் நிற்க முடியும்?

2015இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது விக்கினேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை கூட்டமைப்பினர் மத்தியில் கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலின் போது விக்கினேஸ்வரன் ஏதாவது ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், அது எவருக்கு சாதகமாக இருக்கிறது என்பதும் உற்றுநோக்கப்படும்.

அதே வேளை பேரவையினால் முன்வைக்கப்பட்ட தீர்வாலோசனையை முன்னிறுத்தி ஒரு அரசியல் கட்சி பிரச்சாரங்களை முன்னெடுக்கும் போது, அந்தக் கட்சி தேர்தலில் பெறும் வெற்றி என்பதே அதற்கான மக்கள் ஆதரவாகக் கணிக்கப்படும்.

எனவே கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினரின் தேர்தல் வெற்றியைக் கொண்டே, பேரவைக்கு எந்தளவு ஆதரவு இருக்கிறது என்பதையும் கூட, ஒருவர் அளவிடலாம். இந்த நிலைமை பேரவையின் சமூக தகுதிநிலையையும் பாதிக்கும்.

ஒரு வேளை தேர்தல் வெற்றி உயர்வாக இருந்தால் அதனை ஒரு மக்கள் ஆணையாகவும் எடுத்துக் கொள்ளலாம் அதுவே நேர்மாறாக இருந்தால் அது பேரவையின் வீழ்ச்சியை அதாவது விக்கினேஸ்வரனின் வீழ்சியை பறைசாற்றும். இவ்வாறானதொரு சூழலில் விக்கினேஸ்வரன் அல்லது பேரவை எடுக்கக் கூடிய சிறந்த முடிவு எதுவாக இருக்கும்?

ஆனால் இந்த பத்தியாளரின் புரிதலில் இது கொள்கை சார்ந்த ஒரு தேர்தல் அல்ல. நகைச்சுவையாக சொல்வதானால் குப்பை அள்ளுவதுடன் தொடர்பானது.

ஆனால் இதிலுள்ள கவலைதரும் விடயமென்னவென்றால், குப்பை அள்ளுவதைக் கூட தமிழர்களால் ஒற்றுமையாக அள்ள முடியவில்லை.

குப்பை என்பது இங்கு குறியீட்டு ரீதியாகவே எடுத்தாளப்படுகிறது. உள்ளுராட்சி தேர்தல் என்பது தேசியம் தொடர்பானதோ அல்லது சர்வதேச விசாரணை தொடர்பானதோ அல்ல.

ஒரு நகரசபை அல்லது பிரதேசபையுடன் தொடர்பானது. இதில் எதற்கு தேவையில்லாத விவாதங்கள்? இந்த தேவையற்ற விவாதங்கள் இறுதியில் கூட்டமைப்பினால் அல்லது தமிழரசு கட்சியினது ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு முயற்சிகளுடன்தான் மக்கள் நிற்கின்றனர் என்னும் முடிவை பறைசாற்றலாம்.

இந்தத் தேர்தல் களத்தில் இறங்கும் அரசியல் கூட்டணிகள் உண்மையில் கொள்கை சார்ந்த விடயங்களைவிடுத்து, மக்களின் அடிப்படையான தேவைகள், உட்கட்டுமானங்கள் போன்ற விடயங்களில் தமது கட்சி எவ்வாறான சிறந்த வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கின்றது என்பதைத்தான் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் இதனை எந்தவொரு தேசியவாத தமிழ் கட்சியும் பின்பற்றப் போவதில்லை இறுதியில் யானை தன், தலையில் தானே மண்ணையள்ளிப் போடுவது போன்று, உள்ளுராட்சித் தேர்தலில் இவர்கள் முன்னிறுத்தும் கொள்கை வாதங்களே இறுதியில், அவர்களது கொள்கை நிலைப்பாட்டை பலவீனப்படுத்தலாம்.