அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை!

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை. இது தற்காலிக நிறுத்தம். 2024 பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன இலகுவான வெற்றியை பெறும். அனைத்து ராஜபக்சக்களும் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கவில்லை,சசீந்திர ராஜபக்ச மொனராகல மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.