குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் விசாரணை உண்டு. அதில் பாரபட்சம் இல்லை..

ஆசிரியர் - Editor I
குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் விசாரணை உண்டு. அதில் பாரபட்சம் இல்லை..

குற்றஞ்சாட்டப்பட்டவர் எவராக இருந்தாலும் அவர் மீது விசாரணை நடாத்தப்படும் அது இராணுவ தளபதிகளாக இருந்தாலும் சரி, 

பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களாக இருந்தாலும் சரி. அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூ றியுள்ளார். 

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினர் இன்று காலை யாழ்.வீரசிங்க ம் மண்டபத்தில் விசேட அமர்வு ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த அமர்வின் நிறைவில்

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அலுவலகத்தின் தலை வர் சாலிய பீரிஸிடம் ஊடகவியலாளர்கள் இராணுவத்திடம் 

ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல்போனவர்கள் விடயத்தில் இராணுவ தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர்கள்,

அமைச்சின் செயலாளர்கள் விசாரிக்கப்படுவார்களா? என கேட்டபோதே மேற்கண்வடா று கூறியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறிப்பிடுகையில்,  குற்றஞ்சாட்டப் பட்டவர் எவராக இருந்தா லும் விசாரிக்கப்படுவார்கள். 

அந்த விசாரணைகளில் அழுத்தங்களுக்கு இடமளிக்கப்படாது. பாரபட்சங்கள் காட்டப் படாது. என கூறினார். 

இதனை தொடர்ந்து போரின் நிறைவுப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 

இருந்தமை தொடர்பாக கேட்டபோது ஜனாதிபதியாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருந்தாலும், 

சுயாதீனமான விசாரணைகள் நடாத்தப்படும். அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் போர் காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் விடயத்தில் இராணுவமாக இரு ந்தாலும் சரி, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் 

அமைப்பின் போராளிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீதும் விசாரணைகள் நடாத்தப்படும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு