கொழும்பு சென்ற வயோதிப தம்பதிகள் 10 பவுண் நகையை இழந்தனர்..
யாழ்ப்பாணத்தில் இருந்து அன்னைமுத்துமாரி சொகுசு பஸ்சில் கொழும்பு சென்ற வயோதிபப் பெண்மணியிடம் இருந்து 10 பவுண் நகை களவாடப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன் கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரு சோடி காப்பு இரு சங்கிலிகள் போன்றன களவாடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் உள்ள உறவினரின் நிகழ்வொன்றிற்கு பெண்மணியும் அவரது கணவரும் கொழும்பில் இருந்து அன்னைமுத்துமாரி பஸ்சில் நேற்று முன்தினம் (10)
இரவு சென்றுள்ளனர். நிகழ்வு முடிந்து மறுநாள் இரவு அதே பஸ்சில் ஏறி கொழும்பு சென்று வீட்டுக்குப் போய் நகை வைத்திருந்த பாக்கினை
திறந்து பார்த்திருக்கின்றார்கள் பாக்கில் நகை வைத்திருந்த பையினைக் காணவில்லை. உடனடியாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அதாவது பஸ்சில் பாக்கினை தனது மடியில் வைத்திருந்ததாகவும் தூக்கத்தில் தான் பாக்கினைத் திறந்து நகை வைத்திருந்த பையினை
எடுத்திருக்கிறார்கள் என்று பெண்மணி தெரிவித்துள்ளார். சொகுசு பஸ்சில் இருக்கைக்கு ஏற்ற பயணிகளைத் தான் ஏற்றிச் செல்வார்கள். களவு போகும் சந்தர்ப்பம் குறைவாக இருக்கும்.
பஸ்சில் இருந்து இறங்கியதும் பாக்கினை திறந்து பார்த்திருந்தால் பஸ்சில் பயணம் செய்தவர்களை விசாரித்தால் உண்மை தெரியவந்திருக்கும்.
ஆனால் இவர்கள் இந்த பஸ்சிற்குள் எவர் களவு செய்வார் என்ற நம்பிக்கையில் இருந்ததால் களவு போனது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.