SuperTopAds

பிரபல பெண் சட்டத்தரணி அவரது சாரதியால் வெட்டிக் கொலை!

ஆசிரியர் - Editor I
பிரபல பெண் சட்டத்தரணி அவரது சாரதியால் வெட்டிக் கொலை!

35 வயதுடைய முன்னணி பெண் சட்டத்தரணி ஒருவர் பெங்கிரிவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வீட்டின் சாரதியால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையைச் சேர்ந்த சந்தேகநபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தை  அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

உயிரிழந்தவர் ஜெயனி செவ்மினி டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்ய மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன்,

பெந்தர ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சந்தேக நபரை பெந்தர பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.