SuperTopAds

ஐனாதிபதி ரணிலுடன் தமிழ் கட்சிகளை சேர்ந்த சிலர் உள்ளே உறவு - வெளியே பகை நாடகம்..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதி ரணிலுடன் தமிழ் கட்சிகளை சேர்ந்த சிலர் உள்ளே உறவு - வெளியே பகை நாடகம்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் யாழ் மக்களும் பங்காளர்களாக வேண்டும். மறைமுகமாக அவருடன் நெருங்கிய உறவைப் பேணும் சில தமிழ் கட்சிகள் வெளிப்படையாக அவரை எதிர்க்கின்றன.

ஆனால் நாம் யாருக்கும் அடிபணியாமல் தைரியமாக அவரை ஆதரிக்கின்றோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை (14)  இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே வீழ்ச்சியிலிருந்து முழுமையாக மீள முடியும். 

அவரது வெற்றியில் நாமும் பங்காளர்களாக வேண்டும். நாட்டிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஜனாதிபதி ரணிலுடன் ஏதோ ஒரு உறவைப் பேணுகின்றனர். 

அவர்கள் ஆத்மார்த்தமாக ரணிலுக்கு ஆதரவளிக்கின்ற போதிலும், வெளிப்படையாக வேறு விதமாகவே செயற்படுகின்றனர்.

ஆனால் ஈ.பி.டி.பி.யைப் பொறுத்த வரை அவ்வாறு செயற்பட வேண்டிய அவசியமில்லை. 

இன்னாருக்குத் தான் ஆதரவளிக்க வேண்டும் என்று எம்மை எவரும் கட்டுப்படுத்தவும் முடியாது. 

இது எமது கட்சி ரீதியாக எடுக்கப்பட் தீர்மானமாகும். ஆனால் சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் யார், அவர்களுக்கு யார் பணிப்புரைகளை விடுக்கின்றார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

ஈ.பி.டி.பி. மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களையே எடுத்துள்ளது. அரசியல் ரீதியான பிரச்சினைகளானாலும், அபிவிருத்திகளானாலும் ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே அவற்றை வழங்க முடியும். அவரது வாக்குறுதிகள் அனைத்திற்கும் நாமே பொறுப்பு என்றார்.