ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஆகியோரை சந்தித்து பேச்சு..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஆகியோரை சந்தித்து பேச்சு..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்தநிலையில் நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார்.

நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்த நாமல் ராஜபக்ஷ பொன்னாடை போர்த்து கௌரவித்தார்.பல்வேறு விடயங்கள் 

கலந்துரையாடப்பட்டநிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்ஷவுக்கு நினைவாக நந்திக் கொடி வழங்கப்பட்டது.

யாழ்.மறை மாவட்ட ஆயர் சந்திப்பு 

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் யாழ் மறை மாவட்ட ஆயரிற்கு இடையிலான சந்திப்பு இன்று காலை இடம் பெற்றது.

யாழ் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில்  இடம்பெற்று சந்திப்பில் நாமல் ராஜபக்சே மற்றும் அவர் தரப்பை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் நாமல் ராஜபக்சேவைக்கு இடையிலே 15 நிமிடங்கள் சந்திப்பு இடம் பெற்றது.

கலந்துரையாடல் தொடர்பான விடயங்களை நாமல் ராஜபக்ஷ பின்னர் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு