யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் சென்ற பேருந்து கோர விபத்தில் சிக்கியது! 30 பேர் படுகாயம்..

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திருகோணமலையில் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து கங்கா பாலத்திற்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் விழுந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதன் போது, பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.