SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க விசேட செயற்றிட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க விசேட செயற்றிட்டம்..

அண்மைக்காலமாக வட மாகாணத்தில் சடுதியாக அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை தவிர்க்கும்  நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவதற்காக இந்த விசேட வேலைத்திட்டம் கௌரவ ஆளுநர் றெஜினோல்ட் குரே  ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் தலைமையகம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், வட மாகாண முதலமைச்சரின் அமைச்சு ஆகியன இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்தவுள்ளன.  

யாழ் போதனா வைத்தியசாலை தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் (2018 ஜனவரி 01 முதல் ஜீன் 30 வரை) 2454 பேர் வீதி விபத்திகளினால் காயமடைந்துள்ளதுடன் 42 பேர் மரணமடைந்தும் உள்ளனர். 

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக!

•    இலங்கை மின்சார சபை, உள்ளுராட்சி சபைகள் இணைந்து முதற்கட்டமாக யாழ் நகரப்பகுதியில் விபத்துகள் அதிகளவில் நடைபெறும் சந்திகளாக இனங்காணப்பட்ட 15 சந்திகளுக்கு வீதி மின் விளக்குகள் பொருத்தவுள்ளனர்.

•    வீதி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து அதிகளவில் விபத்து நடைபெற்ற வீதிகளாக இனங்காணப்பட்ட 21 சந்திகளில் வீதி வேக தடைகளை (ளுpநநன டீசநயமநசள) ஏற்படுத்தவுள்ளன. 

•    வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களில் இரவிலும் ஒளிரத்தக்க விசேட நிற விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை (ளுவiஉமநச) விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

•    யாழ் மாநகரசபையின் அனுசரணையுடன் 25 விழிப்புணர்வு பதாதைகள்; பாடசாலையை அண்டிய முக்கிய சந்திகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

•    லயன்ஸ் கழகத்தினரால் வீதி விபத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கூடிய வாசகங்கள் அடங்கிய பொம்மைகள் (Pடயஉயசனள) 200 வீதிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. 

•    எதிர்வரும் 12ம் திகதி (12.07.2018) அன்று காலை 8.30 மணி முதல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வீதிவிபத்து சம்பந்தமான செயலமர்வும் அதனைத் தொடர்ந்து அதன் முன்றலில் அமைந்துள்ள பிரதான வீதியில் விபத்துக்களை தடுப்பதற்கான செயல்முறை விளக்கங்களும் கொழும்பிலிருந்து வருகை தரும் விசேட பொலிஸ் உயர் அதிகாரிகளினால் வழங்கப்படும் 

இச் செயலமர்வில் யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி பயிலும் 1500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகள், பொதுப் போக்குவரத்துச் சாரதிகள், கலந்து கொள்ளவுள்ளனர். 

யாழ் வேம்படி மகளீர் கல்லூரி மற்றும் யாழ் மத்திய கல்லூரி என்பனவற்றிக்கு விஜயம் செய்யும் ஆளுநர் றெஜினோல்குரே உள்ளிட்ட அதிதிகள் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளுக்கான ஒளிரும் ஸ்ரிக்கர்களை ஒட்டவுள்ளனர். 

•    மறுநாள் 13ம் திகதி (13.07.2018) காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அலுவலர்கள் மற்றும் சாரதி பயிற்சிப்பாடசாலை சாரதிகளுக்கான செயலமர்வும் அதனை தொடர்ந்து ஏ9 வீதியில் செயல்முறை பயிற்சியும் வழங்கப்படும் அத்துடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் வாகனங்களுக்கு ஒளிரும் ஸ்ரிக்கர்கள் வழங்கப்படும்.