யாழில் சுகாதார அமைச்சரின் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதானவர் 75 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை..

ஆசிரியர் - Editor I
யாழில் சுகாதார அமைச்சரின் கூட்டத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதானவர் 75 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை..

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நபரை 75ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்று , வழக்கினை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. 

வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போது குழப்பத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சாவகச்சேரி பொலிஸாரால் குறித்த நபர் செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் , சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே , அந்நபரை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு