விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கா நியமனம் வழங்கல் நிறுத்தப்படும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கா நியமனம் வழங்கல் நிறுத்தப்படும் அபாயம்..

வடக்கு மாகாண பாடசாலைகளில்  நிலவும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களிற்கான நியமனம் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் 

வடக்கு கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் குழறுபடிகளால் நியமனமங்கள்வழங்கும் நடவடிக்கை முற்றாகவே நிறுத்தப்படும் அபாயம் காணப்படுகின்றது.

இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளில் கானப்படும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களிற்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்றன. 

அவ்வாறு இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் என்ற பட்டியலும் மாகாண கல்வி அமைச்சுகளிற்கு கையளிக்கப்பட்டன. 

அவ்வாறு கையளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள தேர்வானவர்களிற்குரிய பாடசாலைகளைத் தீர்மானித்து வழங்குமாறு மாகாணக் கல்வி அமைச்சுக்களிடம் கோரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்திற்கு தேர்வானதாக தெரிவிக்கப்பட்ட 186பேரின் பெயர்ப் பட்டியலிற்கும் உரிய பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டது. 

இதேபோன்று கிழக்கு மாகாணமும் தமது பட்டியலை அனுப்பி வைத்துள்ளது. இருப்பினும் ஏனைய 7 மாகாணங்களும் குறித்த பட்டியலை இதுவரை அனுப்பி வைக்கவில்லை. 

மேற்படி பட்டியலில்  உள்ளவர்களது பெயர்கள் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சிலமாகாணங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதேபோன்று மேலும் சில மாகாணங்களோ குறித்த நியமன அதிகாரங்களை நேரடியாகவே மாகாணத்திடம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இவற்றின் அடிப்படையில் 7 மாகாணங்களும் கால தாமதம் அடைவதனால் மேற.படி நியமனம் வழங்குவதில் சந்தேகம் நிலவுவதாக கல்வி அமைச்சின் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு