யாழ்.துன்னாலையில் பொலிஸார் - இராணுவத்தினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்! 17 பேர் கைது..

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட துன்னாலை பிரதேசத்தில் இராணுவம் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடனும் அரச புலனாய்வாளர்களின் தகவலுக்கமைய நெல்லியடி பொலிஸாரினால் நேற்று (12) வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, திறந்த பிடியாணைகள், பிடியாணைகள், சட்டவிரோத மதுபானமான கசிப்பு விற்பனையாளர்கள், மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பருத்திதுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.