வீதி விபத்துக்களால் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - பணிப்பாளர் சத்தியமூர்த்தி..

வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன், நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் ஆதித்தன்,
அதி தீவிர சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் முத்துலிங்கம் நவநீதன், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரின் வைத்திய நிபுணர் இராசு இளங்கோ ஆகியோரும் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தனர்.