யாழ்.ஆனைக்கோட்டையில் வீடு புகுந்து வாகனங்களுக்கு தீவைத்து, பொருட்களை அடித்து நொருக்கி வாள்வெட்டுக் குழு அடாவடி..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைக்கோட்டையில் வீடு புகுந்து வாகனங்களுக்கு தீவைத்து, பொருட்களை அடித்து நொருக்கி வாள்வெட்டுக் குழு அடாவடி..

யாழ்ப்பாணத்தில் உள்ள மரக்காலை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளது.

ஓட்டுமடம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள், நேற்று செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை அத்துமீறி நுழைந்த கும்பலே வன்முறையில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.குறித்த, உரிமையாளரின் மகன், 

யாழில் இயங்கிய வன்முறை கும்பலுடன் முன்னர் சேர்ந்து இயங்கிய நபர் எனவும், தற்போது பிரான்ஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு