சாவகச்சோி வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை கைது செய்யும் சதி முயற்சி மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீட்டால் தோல்வி!

ஆசிரியர் - Editor I
சாவகச்சோி வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை கைது செய்யும் சதி முயற்சி மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீட்டால் தோல்வி!

சாவகச்சோி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்து வைத்தியசாலையிலிருந்து அகற்றும் முயற்சி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

சாவகச்சோி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவின் இடமாற்ற கடிதத்தை சமர்ப்பிப்பதற்காக மாகாண சுகாதார பணிப்பாளர் பொலிஸ் பாதுகாப்புடன் பெருமெடுப்பில் வைத்தியசாலைக்குள் நுழைந்தார். 

எனினும் ஞாயிற்றுக்கிழமை கடமை நாள் அல்ல என்பதாலும், இரவு ஆனதால் கடமை நேரம் அல்ல என்பதாலும் கடிதத்தை கையேற்க வைத்தியர் அர்ச்சுனா மறுத்துள்ளார். 

இதனையடுத்து மாகாண சுகாதார பணிப்பாளர் சாவகச்சோி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னுடன் வைத்தியர் அர்ச்சுனா கண்டிப்பாக நடந்து கொண்டதாக கூறி முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

முறைப்பாட்டை ஏற்ற பொலிஸார் வைத்தியரை சாவகச்சோி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். எனினும் வைத்தியசாலையில் வேறு வைத்தியர்கள் இல்லாமல் வைத்தியசாலையை விட்டு வெளியே வரமுடியாது. 

காரணம் நோயாளிகள் பாதிக்கப்பட்டால் அதற்கு தான் பொறுப்பாளி ஆகவேண்டிவரும் என வைத்தியர் அர்ச்சுனா பதிலளித்துள்ளார். இதனையடுத்து மாகாண சுகாதார பணிப்பாளர் ’வேறு ஒரு வைத்தியருடன் வைத்தியசாலைக்கு சென்று

அந்த வைத்தியர் கடமையில் இருப்பார் எனவும் வைத்தியர் அர்ச்சுனாவை பொலிஸ் நிலையம் செல்லுமாறும் கூறியுள்ளார். இதன்போது பொதுமக்கள் ஒன்று திரண்டு கடுமையாக எதிர்த்த நிலையில், 

அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து வைத்தியர் அர்ச்சுனாவை கைது செய்ய தீவிரமான முயற்சி எடுக்கப்பட்ட நிலையில் இந்த விடயத்தில் தலையிட்ட தனித உரிமைகள் ஆணைக்குழு அவரை இரவில் கைது செய்யகூடாது என கூறியுள்ளது. 

இதனையடுத்து பொலிஸார் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு