வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக யாழ்.தென்மராட்சியில் மாபெரும் மக்கள் போராட்டம் - திட்டமிட்டபடி இன்று நடைபெறும்...

ஆசிரியர் - Editor I
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக யாழ்.தென்மராட்சியில் மாபெரும் மக்கள் போராட்டம் - திட்டமிட்டபடி இன்று நடைபெறும்...

“சாவகச்சோி வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைவோம்” என்ன தொனிப் பொருளில் இன்று காலை தென்மராட்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

சாவகச்சோி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையேற்ற வைத்தியர் இ.அர்ச்சுனா வைத்தியசாலையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, 

வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள் சிலர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் பக்க தவறுகளை மூடி மறைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர். 

அவர்களுக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர், மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டன பூரண ஒத்துழைப்பை வழங்கும் நிலையில், 

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும், சாவகச்சோி ஆதார வைத்தியசாலையை பழையபடி மீள இயக்க வலியுறுத்தியும் இன்று காலை 8 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

தென்மராட்சியில் சகல வர்த்தக நிலையங்களையும் மூடி கடையடைப்பு போராட்டமும், சமநேரத்தில் கவனயீர்ப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது. 

இந்த மக்கள் போராட்டத்திற்கு சுமார் 30க்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் தங்கள் ஆதரவினை தொிவித்துள்ள நிலையில், 

திட்டமிட்டபடி இன்று காலை 8 மணிக்கு போராட்டம் நடைபெறவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு