இன்றைய ராசிபலன் - 06/07/2024, கன்னி ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்...

ஆசிரியர் - Editor I
இன்றைய ராசிபலன் - 06/07/2024, கன்னி ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்...

இன்றைய பஞ்சாங்கம்

06-07-2024, ஆனி 22, சனிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.26 வரை பின்பு வளர்பிறை துதியை. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 04.48 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிப்பலன் - 06.07.2024

மேஷம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வங்கி சேமிப்பு உயரும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.

மிதுனம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

கடகம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்

இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த டென்ஷன்கள் விலகி நிம்மதி ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

கன்னி

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். 

துலாம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

தனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

மீனம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் தேவை

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு