எரிபொருட்களின் விலைகள் குறைப்பு! நேற்று நள்ளிரவு முதல் அமுல்..

ஆசிரியர் - Editor I
எரிபொருட்களின் விலைகள் குறைப்பு! நேற்று நள்ளிரவு முதல் அமுல்..

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருள் விலையை நேற்று 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 

இந்த திருத்தங்களின் கீழ், மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ள அதேவேளை, இரண்டின் விலையில் மாற்றமில்லை.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும். ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், 

அதன் புதிய விலை 379 ரூபாவாகும்.ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை355 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன்படி, ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 317 ரூபாவாகவும் மண்ணெண்ணெய்யின் விலை 202 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு