ஆண் ஒருவரை வீட்டுக்கு அழைத்துவந்து தங்கவைக்க முயன்ற மகள் எதிர்ப்பு தொிவித்த தந்தை மீது சரமாரி தாக்குதல்...

ஆசிரியர் - Editor I
ஆண் ஒருவரை வீட்டுக்கு அழைத்துவந்து தங்கவைக்க முயன்ற மகள் எதிர்ப்பு தொிவித்த தந்தை மீது சரமாரி தாக்குதல்...

மாத்தளை, நாவுல பிரதேசத்தில் 70 வயது தந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

29 வயதுடைய மகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் போது, இவர் ஆணொருவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ள நிலையில் அவரை வீட்டில் தங்க வைக்க முற்பட்டபோது 

தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான தந்தை இது தொடர்பில் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து 

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு