SuperTopAds

இன்றைய ராசிபலன் - 09/06/2024, மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்...

ஆசிரியர் - Editor I
இன்றைய ராசிபலன் - 09/06/2024, மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்...

இன்றைய பஞ்சாங்கம்

09-06-2024, வைகாசி 27, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பகல் 03.45 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 08.20 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

இன்றைய ராசிப்பலன் - 09.06.2024

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மிதுனம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுகள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.

கன்னி

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணி சுமை குறையும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 2.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் உண்டாகும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சற்று மந்தமாக இருந்தாலும் மதியத்திற்கு பிறகு நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 2.07 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

மகரம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகளால் நெருக்கடிகள் விலகி தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.