SuperTopAds

திருகோணமலை சாஹிரா மாணவிகளுக்கு பாரபட்சம் இடம்பெற்றதா?- விசாரணை கோருகிறார் கஜன்.

ஆசிரியர் - Admin
திருகோணமலை சாஹிரா மாணவிகளுக்கு பாரபட்சம் இடம்பெற்றதா?- விசாரணை கோருகிறார் கஜன்.

திருகோணமலை சாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளினதும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட்டு அந்த மாணவிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.     

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் வலுவூட்டல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் பாடசாலையொன்றின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவில்லை என்ற ஆதங்கம் முஸ்லிம் மக்களிடமிருந்து வெளிவருகின்றது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் கவலைகளை இங்கே வெளிப்படுத்தியுள்ளனர்.

திருகோணமலை சாஹிரா கல்லூரியில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 70 மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் மிகவும் கவலைக்குரியது. அந்த பிள்ளைகள் பல கனவுகளுடன் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இந்நிலையயில் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை அவர்களுக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தும்.

ஆகவே, இந்த விடயத்தில் இனம், மதம் தொடர்பில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதா? என ஆராயப்பட வேண்டும். அது தொடர்பில் மாணவிகளுக்கு நீதி உடனடியாக வழங்கப்பட வேண்டும். அந்த மாணவிகளின் பெறுபேறுகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றேன் என்றார்.