சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு(photoes)

ஆசிரியர் - Editor III
சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு(photoes)

சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு(photoes)

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட  சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சாய்ந்தமருது நகரத்திற்கு அழகு சேர்த்த   தோணாவும் அதனை அண்டிய பிரதேசங்களும் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்  மேற்கொண்ட  முயற்சியின் காரணமாக தற்போது துரித அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

குறித்த தோணா அபிவிருத்தி தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு  குழுவின் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக உலக சுற்றுச்சூழல் தினமான இன்று ( 05) சாய்ந்தமருது தோணாவையும் அண்டிய பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின்  இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சபான் தலைமையில் குழு ஒன்று கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டீரந்தது.

குறித்த கள விஜயத்தில்   நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட பிரதி பணிப்பாளர்  நிசாந்த குருநெரு,  நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை அலுவலக பொறுப்பாளர் திருமதி வீரவாகு  ,நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர் திருமதி ஜெ. தியாகராஜா,  நகர அபிவிருத்தி அதிகார சபையின் படவரைஞர் எம்.சி.எம்.சி. முனீர்  , தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.எம்.முஸம்மில், மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல். அப்துல் றசீட்  , சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அலுவலர் எம்.எச். முபாறக் ,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல் ஹாஜ்  ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின்  அறிவுறுத்தலுக்கு அமைவாக சாய்ந்தமருது முகத்துவாரம் பிரதேசத்தில் இருந்து மாளிகா வீதிவரைச் சென்று அங்கிருந்து மீண்டும் முகத்துவாரம் வரை நடைபாதை ஒன்றை அமைப்பதற்கும்  தோணாவை முழுமையாக துப்பரவு செய்வதற்கும் உடற்பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்குமான கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதுடன் அதற்கான இடங்களும் அடையாளம் காணப்பட்டன.

குறித்த திட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதற்கு ஏதுவாக திட்ட அறிக்கைகளை விரைவாக தந்துதவுமாறு சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின்  இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சபான்   அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு