SuperTopAds

ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களால் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு!

ஆசிரியர் - Admin
ஜனாதிபதி, பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இரண்டு வருடங்களால் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு!

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.     

"நாட்டைக் காப்பாற்றுவதற்கு வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பது இந்த நேரத்தில் சிறந்த வழி. பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பிற நன்கொடையாளர்களுடன் அரசாங்கம் ஒப்பந்தங்களை எட்டியுள்ளன.

இதனை வெற்றியடையச் செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது எல்லாவற்றையும் விட முக்கியமானது" என்றும் ரங்கே பண்டார தெரிவித்தார்.

"ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலங்களை நீட்டிப்பதற்கான வாக்கெடுப்பை நாங்கள் முன்மொழிகிறோம், ஏனெனில் அதைச் செய்வதற்கான மிகவும் சரியான வழி ஜனநாயக வழி," என்று அவர் மேலும் கூறினார்.