இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 26 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 26 பேர் படுகாயம்..

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 இந்த விபத்து நேற்று (18) சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கண்டியிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று அதிக வேகத்துடன் பயணித்தமையாலும் கவனக்குறைவாக மற்றுமொரு வாகனத்தை முன்னோக்கிச் செல்ல முயன்றமையாலும் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தின் போது 26 பேர் காயமடைந்துள்ள நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்களில் பஸ் சாரதியொருவரின் நிலைமையும் பெண் ஒருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு