சஜித்துடன் இணைந்தார் முன்னாள் இராணுவத் தளபதி!
முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட அவர், ஐக்கிய இராணுவ வீரர்கள் சக்தியின் பிரதானியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நியமிக்கப்பட்டார்.