பெண் ஒருவரின் பணப்பையை திருடிய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஆசிரியர் - Editor I
பெண் ஒருவரின் பணப்பையை திருடிய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

கண்டியில் ஆடை விற்பனை நிலையமொன்றில் பெண்ணொருவரின் பணப்பையைத் திருடியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்டி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணப்பையின் உரிமையாளர் கடந்த மாதம் 9 ஆம் திகதி பணப்பையைக் காணவில்லை எனக் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

 இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, ஆடை விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமரா அமைப்பைக் கண்காணித்த பொலிஸார் பெண் ஒருவர் பணப்பையைத் திருடிச் சென்றதை அவதானித்துள்ளனர். 

இதன் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போது , பொக்காவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு