சீவல் தொழிலாளி மீது பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல்! படுகாயமடைந்த சீவல் தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
சீவல் தொழிலாளி மீது பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல்! படுகாயமடைந்த சீவல் தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி..

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அடம்பன் பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழில் செய்து வரும் நிலையில் நேற்றுமுன்தினம் (2) மாலை குறித்த நபரை அடம்பன் பொலிஸார் வீதியில் மறித்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர் காட்டு இறைச்சி விற்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் வேறு நபர் ஒருவருடன் போலீசார் விசாரித்த விடயம் தொடர்பாக முரண்பட்ட நிலையில் முரண்பட்ட நபரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் குறித்த நபரின் வீட்டில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது சந்தேக நபரின் வீட்டில் இருந்து பனை உற்பத்தி பொருளான பனங்கள் போத்தல் மீட்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு குறித்த சீவல் தொழிலாளி கைது செய்ய முயன்ற நிலையில் ஏற்பட்ட வாய் தர்கத்தின் போது பொலிஸார் சிவல் தொழிலாளியை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதன்போது பொலிஸார் ஹான் ஹெப்பால் (கை விலங்கு) மூர்க்கத்தனமாக தாக்கியதாகவும் போலியான வழக்கு தன் மீது போட முயற்சி மேற்கொள்ளபட்டதாகவும், காயங்களுக்கு உள்ளான நபர் தெரிவித்திருந்தார்.

பலத்த காயங்களுடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரை பார்வையிட்டார் நீதிபதி சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு