அப்பாவி தமிழர்கள் 8 பேர் படுகொலை! 5 பொலிஸாருக்கு ஆயுள் தண்டணை..

ஆசிரியர் - Editor I
அப்பாவி தமிழர்கள் 8 பேர் படுகொலை! 5 பொலிஸாருக்கு ஆயுள் தண்டணை..

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்த பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீடொன்றில் வீடு குடி புகுதல் நிகழ்வின்போது 8 தமிழர்கள் ஆயுதம் தாங்கிய குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட தம்பலகாமம் – பாரதிபுரம் எனும் கிராமத்தில் 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் குறித்த குற்றச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கொடூரச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டு, குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட அன்றைய காலப்பகுதியில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் 3 பொலிஸ் சார்ஜன்ட்களுக்கே ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு