பயண பொதியில் மறைத்துவைத்து யாழ்ப்பாணத்திற்கு 45 லீட்டர் கசிப்பை கடத்திய இருவர் கைது!
அரச பேருந்தில் கசிப்பு கடத்திய இருவர் தர்மபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் பேருந்து மறித்து சோதனை செய்யப்பட்டது.
இதன்போது 45 லிட்டர் கசிப்புடன் சந்தேகநபர் இருவரை கைது செய்ய முற்பட்ட போது ஒருவர் தப்பிச் செல்ல முயற்சித்த வேளை பொலிசார் அவரையும் துரத்தி பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சூட்சுமமான முறையில் பயண பொதியில் கசிப்பினை பொதி செய்து எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.
அத்துடன் விசுவமடு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இரண்டு துசந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.