பொலிஸார் என கூறி வீட்டுக்குள் நுழைந்த கும்பல் 90 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடிக்கொண்டு தப்பியோட்டம்...

ஆசிரியர் - Editor I
பொலிஸார் என கூறி வீட்டுக்குள் நுழைந்த கும்பல் 90 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடிக்கொண்டு தப்பியோட்டம்...

நுரைச்சோலை நாவற்காடு பிரதேசத்தில் பொலிஸார் என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்று வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அறையில் பூட்டி வைத்து அவர்களின் தங்க நகைகள், பணம் உள்ளிட்ட 90 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை கொள்ளையடித்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம், நாவற்காடு பகுதியில் புகையிலை மற்றும் மரக்கறி உற்பத்தியாளர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளைச் சம்பவத்தின்போது ,வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி, தாய் மற்றும் மூன்று மகள்கள் வீட்டில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் சீருடைக்கு நிகரான உடையை அணிந்த கொள்ளைக் கும்பல் விசாரணை மேற்கொள்வதற்காக தாம் வந்துள்ளதாகக் கூறியே வீட்டுக்குள் நுழைந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு