கொழும்பில் சுற்றுலா பயணியை மிரட்டி கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கு விற்றவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

ஆசிரியர் - Editor I
கொழும்பில் சுற்றுலா பயணியை மிரட்டி கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கு விற்றவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள Eat Street உணவகத்துக்குச் சென்ற வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.

இதன்படி சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வெளிநாட்டுப் பயணி ஒருவருக்குச் சந்தேக நபர் கொத்து ரொட்டி ஒன்றை 1,900 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த போது அதனை ஏற்றுக்கொள்ள வெளிநாட்டுப் பிரஜை மறுத்ததையடுத்து சந்தேக நபர் அவரை அச்சுறுத்தியதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 12 யைச் சேர்ந்த 51 வயதான நபரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு