ஆயுள் வேத வைத்தியரை கைது செய்த பெரிய நீலாவணை பொலிஸார்-விசாரணை முன்னெடுப்பு

ஆசிரியர் - Editor III
ஆயுள் வேத வைத்தியரை கைது செய்த பெரிய நீலாவணை பொலிஸார்-விசாரணை முன்னெடுப்பு

ஆயுள் வேத வைத்தியரை கைது செய்த பெரிய நீலாவணை பொலிஸார்-விசாரணை முன்னெடுப்பு

அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆங்கில மருந்து வகைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுள் வேத வைத்தியரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் உள்ள ஆயுள்வேத நிலையம் ஒன்றில் சட்டவிரோதமாக போதையூட்டும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய வியாழக்கிழமை(4) இரவு பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில்   பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதுடன் பல்வேறு வகையிலான  ஆங்கில மாத்திரைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை கைப்பற்றினர்.

அத்துடன் மேற்குறித்த 3500 எண்ணிக்கையுடைய  ஆங்கில மற்றும் 850 எண்ணிக்கையுடைய போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுள்வேத  வைத்தியரான 63 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கைதான சந்தேக நபர் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு