SuperTopAds

7 வருடங்களுக்கு பின்னர் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

ஆசிரியர் - Editor III
7 வருடங்களுக்கு பின்னர் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

கல்முனை காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தின் வருடாந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 7 வருடங்களுக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை(2) மாலை கல்முனை காணிப் பதிவக ஊழியர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில காணிப்பதிவக வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது கல்முனை காணி மற்றும் மாவட்டப் பதிவாளர் எஸ்.சுசிகரன் தலைமையில் நடைபெற்றதுடன் இதன்போது கல்முனை காணிப் பதிவக உத்தியோகத்தர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

முதலில் இந்நிகழ்வில் கிராஅத் ஓதப்பட்டதுடன் வரவேற்புரையினை மேலதிக காணிப் பதிவாளர் ஏ.எச்.எம்.பாஜித் மேற்கொண்டார்.தொடர்ந்து தலைமையுரையினை காணிப் பதிவாளர் எஸ்.சுசிகரன் நோன்பின் மகிமை தொடர்பில் சிறப்பாக எடுத்துரைத்தார்.தொடர்ந்து அஸ்ஸெய்க் ஏ.எல்.எம் .றிப்கான் (நளிமி) நோன்பின் சிறப்புக்கள் தொடர்பில் பயன் மார்க்க சொற்பொழிவினை மேற்கொண்டதுடன் இறுதியாக நன்றியுரையினை ஊழியர் நலன்புரி அமைப்பின் செயலாளர் யு.எல்.அப்துல் பாசித் மேற்கொண்டு இரவுப் போசனத்துடன் இந்நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.